Sunday, 17 November 2024

ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு அபராதம்.

 நிலத்தை வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. பதிவு செய்யாவிட்டால் அபராதம்.. ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி

ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.

 புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாகியது.

 மனை விற்பனை: இதனடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

  5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..

ஆணையத்தில் பதிவு செய்யாமல், வீடு, மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, புகார் விசாரணைக்கு வரும்போது, 1 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை என, பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.. 

 நடைமுறைகளை மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது.. இது தொடர்பாகவே புதிய உத்தரவையும் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

"ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை மாநகராட்சி பகுதியில், தலா, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம்: மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அபராதம்: 

 நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். 

தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment