தமிழ்நாடு பட்ஜெட் 2025-ன்
முக்கிய அறிவிப்புகள்🔥🔥.
▪ இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
▪ மகளிர் உரிமைத்தொகைக்காக 13,807 கோடி ஒதுக்கீடு – இதுவரை பலன் பெறாதவருக்கும் கிடைக்க நடவடிக்கை
▪ 100 கோடியில் சென்னை அறிவியல் மையம்
▪ 2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு மின்-பைக் வாங்க ரூ.20,000 மானியம்
▪ காஞ்சிபுரம் அரசு அண்ணா மருத்துவமனை 120 கோடியில் தரம் உயர்வு
▪ மதுரை கடலூரில் 250 கோடியில் காலணி தொழில் பூங்கா 20,000 பேருக்கு வேலை
▪ ஓசூரில் 400 கோடியில் புதிய டைடல் பூங்கா
▪ காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெரும் பள்ளிக்கும் விரிவாக்கம் – 3.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் – ரூ 600 கோடி ஒதுக்கீடு.
▪ திருச்சியில் 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழில் பூங்கா 5000 பேருக்கு வேலைவாய்ப்பு
▪ சென்னை பெருநகர் பகுதிகளில் ரூ. 88 கோடியில் மழை நீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்
▪ திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை நதிக்கரை மேம்பாட்டிற்கு 400 கோடி ஒதுக்கீடு
▪ புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் 6,668 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 30லட்சம் மக்கள் பயன்.
▪ 10,000 மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்படும். 37,000 கோடி வழங்க இலக்கு.
▪ வேளச்சேரியில் ரூ 310 கோடியில் புதிய பாலம் 7 இலட்சம் மக்கள் பயன்
▪ மாணவியர் விடுதிகள் - சென்னை கோவை மதுரையில் 275 கோடியில் 1000 மாணவிகள் பயன்பெறுவர்.
▪ நாட்டில் சிறந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகத்தை உருவாக்க நடவடிக்கை
▪ 45 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும். இதன் காரணமாக ஐ. நா அங்கீகரித்த 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
▪ கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2200 கோடி – 6100 கி. மீ சாலைகள் அமைக்கப்படும்
▪பள்ளிப்பாடத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும்.
▪வின்வெளி தொழில் நுட்ப நிதியாக 10 கோடி ஒதுக்கப்படும்
▪அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம்.
▪இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. அரசு ஒன்றிய கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே 2000 கோடி ஒதுக்கும்.
▪ கோவளத்தில் 14 tmc கொள்ளளவு கொண்ட புதிய நீர் தேக்கம் ரூ350 கோடியில் அமைக்கப்படும். 3010 ஏக்கர் பயன்பெறும்.
▪செமி கண்டக்டர் இயந்தரத் தொழிற்பூங்கா கோவை (சூலூர், பல்லடம் ) பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
▪புதிய புனல் மின் நிலையங்கள் ரூ.11721 கோடியில் வெள்ளிமலை , ஆழியாறு பகுதிகளில் அமைக்கப்படும்
▪சென்னை தூத்துக்குடி விழுப்புரம் கடலூர் 6 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் நடவடிக்கை
▪ 70 கோடியில் 700 எரிவாயு பேருந்துகள்
▪1125 மின் பேருந்துகள் – சென்னை 950, கோவை 75, மதுரை 100
▪19000 கைவினையர்களுக்கு மானியமாக 74 கோடி
10 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2.5 லட்சம் கோடி கடன் உதவி
▪உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
▪சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது – 10 ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை
▪புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு இல்வச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்
▪ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி!
▪பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!
▪பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000
▪ சென்னை கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம்
▪சென்னை சீராக்க குடிநீர் திட்டத்திற்கு ரூ.2423 கோடி
▪102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைப்பு ரூ 675 கோடி ஒதுக்கீடு
▪மகளிர் விடியல் பயணம் 3,600 கோடி ஒதுக்கீடு
▪சென்னைக்கு அருகில் உலகத்தரத்தில் புதிய நகரம்
▪10 இடங்களில் 77 கோடி செலவில் தோழி விடுதிகள்
▪கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ 2000 கோடி
▪அன்பு சோலை முதியோர் பராமரிப்பு மையம் 10 இடங்களில் அமைக்கப்படும்
▪அரசு பொறியியல் கல்லூரிகளில் 50 கோடியில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
▪ கலைஞர் கனவு இல்லம் – ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடி
▪மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஊர்க்காவல் பாதையில் சேர்க்கும் திட்டம்
▪ வியன் திறன் மிகு மையங்கள் அமைக்க 50 கோடி (VR)
▪ 4000 மெகா வாட் திறன் கொண்ட மின் கலன் சேமிப்பு அமைப்புகள்
▪ கடல் சார் வள அறக்கட்டளைக்காக ரூ. 50 கோடி
▪ வேட்டை பறவைகள் ஆராய்ச்சி மையம்
▪ ரூ.40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபு சார் காட்சி அரங்கம்
▪ தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
▪ பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை ரூ.10 கோடி ஒதுக்கீடு!
▪ ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்!
▪ நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு 5,256 குடியிருப்புகள் ரூ.1,051 கோடி
▪ திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம் ரூ.2,100 கோடி
▪ ரூ.150 கோடியில் புராணக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு
▪ ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி
▪ இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 2 லட்சம் இழப்பீடு
▪ மீன் பிடி தடை கால ஊக்கத்தொகை ரூ 8000 ஆக உயர்வு
▪ இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை
▪ நான்காண்டுகளில் 78882 பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
▪ ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி
▪ மேற்கு புறவழிச்சாலை- கோயம்புத்தூர் 12.5 கி.மீ நீளம் ரூ.348 கோடி திருநெல்வேலி 12.4 கி.மீ நீளம் ரூ.225 கோடி ஒதுக்கப்படும்
▪ மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆய்வு. (உள்ளூர் ரயில் ) சென்னை - செங்கல்பட்டு – திண்டிவனம் , சென்னை – காஞ்சிபுரம்-வேலூர், கோவை-திருப்பூர் – ஈரோடு- சேலம் .
▪ நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் புதிய திட்டம் ரூ.75 கோடி
▪ முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 3000 புதிய வீடுகள்
▪ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் 10 லட்சம்
▪ உதகையில் 70 கோடியில் புதிய பூங்கா
#தமிழ்நாடுதலைவர்கள்